திருகோணமலை 3ம் கட்டைப் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, அதன் டிப்போவிற்கு செல்லும் வழியில் பள்ளமொன்றில் புதைந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, நீர்ப் பாசனத் திணைக்களத்தினால் குறித்த பகுதியில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும், சமீப காலமாக தொடரும் கனமழையின் காரணமாக குறித்த நிலப்பகுதி, தன்மையிழந்து பள்ளமாகிப் போனமையே குறித்த பஸ் புதைய காரணமாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1