வொஷிங்டன் அருகே பயணிகள் விமானத்துடன் அமெரிக்க இராணுவ பிளாக்ஹாக் (H-60) ஹெலிகாப்டர் மோதியதாக CNN சர்வதேச செய்தி சேவை தெரிவிக்கின்றது.
அமெரிக்கன் எயர்லைன்ஸின் வணிகப் பயணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு கன்சாஸிலிருந்து வொஷிங்டனுக்குச் சென்று கொண்டிருந்த குறித்த விமானம் அந்நாட்டு நேரப்படி இரவு 9 மணியளவில் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் ஓடுபாதையை நெருங்கும் போது அமெரிக்க இராணுவ பிளாக்ஹாக் (H-60) ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் – PSA ஏர்லைன்ஸ் பொம்பார்டியர் CRJ700 – ஜெட் விமானம். அதில் 65 பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது .
குறித்த விபத்து தொடர்பான சேத விபரங்கள் தொடர்பில் தகவல் இல்லை. இவ் விபத்து தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1