இன்று (30) வியாழக்கிழமை மாலை திருகோணமலை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது கடல் அலையின் தாக்கத்தால் நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கினர்.
நால்ரில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருகோணமலை சீனக்குடா பகுதியை சேர்ந்த 20வயதிற்கு உட்பட்ட நான்கு நண்பர்கள் திருகோணமலை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்குண்டு நீரில் மூழ்கியுள்ளனர். இவர்களில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் காணாமல் போய் உள்ள 20 வயதான ஒருவரை தேடும் பணியை பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
காப்பாற்றப்பட்ட இளைஞர்கள் மூவரும் திருகோணமலை துறைமுக பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.