24.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
கிழக்கு

திருகோணமலையில் மணல் அகழ்வு பிரச்சினை: ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சரின் கலந்துரையாடல்

இன்றைய தினம் (28) திருகோணமலையில் மணல் அகழ்வு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோரின் தலைமையில் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர்கள், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம், வனத்துறை, மகாவலி அதிகாரசபை, நீர்ப்பாசனத் துறை, காவல்துறை மற்றும் கடற்படை உள்ளிட்ட பொறுப்பான நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் முக்கியக் குறிக்கோள் திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வு தொழிலுக்கு வழங்கப்படும் அனுமதிகளில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் சிக்கல்களை தீர்க்கும் வழிமுறைகளை ஆராய்வது என குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக, மகாவலி ஆற்றின் குறுக்கே மணல் அகழ்வின் போது மக்களின் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சீர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கவும் ஆளுநரும் பிரதி அமைச்சரும் உறுதியளித்தனர்.

மேலும், தாமதங்களுக்கு காரணமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமல் செய்ய, கடுமையான விதிமுறைகள் கொண்டு உரிமங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சம்மாந்துறை நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

east tamil

UPDATE – களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

முறக்கொட்டாஞ்சேனை விபத்து – ஒருவர் பலி

east tamil

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment