மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடைப் பகுதியில் நேற்றிரவு (10 மணியளவில்) ஏற்பட்ட குழு மோதலில் இரு தரப்பினரும் காயமடைந்தனர். பலர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிலர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் ஈடுபட்ட இரவு நேர வேக மோட்டார் சவாரி மற்றும் ஒரு ஆட்டோ சாரதி இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம், வாக்குவாதமாக மாறி குழு மோதலாக முற்றியது.
கைகலப்பின் காரணமாக இரு குழுக்களிலும் பலர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இரு தரப்பினரும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.