யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், தனது பதவியை துறந்துள்ளதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நேற்று (25) யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவைக் கூட்டம் நடந்த போது, வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எச்சரிக்கையுடன் மன்னிப்பளிக்க தீர்மானிக்கப்பட்டது.
பேரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுப்பதற்கு பேராசிரியர் ரகுராம் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அந்த மாணவர்கள் தன் குறித்து அவதூறாக சமூக ஊடகங்களில் எழுதியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அவரது எதிர்ப்பை மீறி, மாணவர்களுக்கு மன்னிப்பளிக்க தீர்மானிக்கப்பட்ட போது, தான் பதவிவிலகப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், அதையும் மீறி, வகுப்பு தடைவிதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மன்னிப்பளிக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த பின்னணியில், இன்று பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பேரவையின் தீர்மானத்தை விமர்சித்திருந்தனர்.