இன்று (26) முகமாலை பகுதியில் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் இரண்டு மாடுகள் ரயிலுடன் மோதுண்டதில் உயிரிழந்துள்ளன.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயில், முகமாலை பகுதியில் பயணிக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் வரும்போது ஒலி எழுப்பியதனால், ரயில் பாதையின் அருகே மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் அச்சத்தால் சிதறி ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது, ரயில் பாதையை கடக்க முயன்ற இரண்டு மாடுகள் நேரடியாக ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன.
இவ் விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1