இம்மாதம் 31ஆம் திகதி முதல், கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான தினசரி இரவு தபால் ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை ரயில்வே திணைக்களம் எடுத்துள்ளது.
இந்த இரவு ரயில் சேவையின் படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8:00 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4:35 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை சென்றடையும். அதேபோல், காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8:00 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4:40 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.
இந்த புதிய ரயில் சேவை, பயணிகளுக்கு இரவு நேரத்தில் மேலும் விரைவான மற்றும் வசதியான பயணம் செய்ய உதவுகின்றது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1