திருகோணமலை அறிவு ஒளி மையத்தில் இலவசக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நேற்றைய தினம் (25.01.2025) திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சண்முகம் குகதாசன் மற்றும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அருட் கலாநிதி நோயல் இம்மானுவேல் ஆண்டகை ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு, தி/இ.கி.ச. இந்துக் கல்லூரி ஆரம்பப் பிரிவுக் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் போது மாணவர்களின் கல்வி விழிப்புணர்வு நாடகம், போதைப் பொருள் விழிப்புணர்வு கூத்து, கலாச்சார நடனம் மற்றும் பாடல் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன.
இந்நிகழ்வை அறிவு ஒளி மையத்தின் நிறுவனர் உதயகுமார் அஜித்குமார், செயலாளர் இளங்கோவன் ஜெயவதனி, பொருளாளர் ஜீவரத்தினம் புகழ், வேந்தன் டிலக்ஷிகா ஆகியோர் ஒருங்கிணைத்ததோடு, திருமதி. S.மனோகாந்தன் இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கினார்.
நிகழ்வில் கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், மகளிர் சங்கங்கள், இளைஞர் சங்கம், அறநெறிப் பாடசாலையினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பங்கு கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.