இன்றைய தினம் (25.01.2025) திருகோணமலையில் Graphic Designing வகுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன.
இளையோர் திறன்விருத்தி சார்ந்து தன்னலமற்ற முறையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் இன்று வரையும் சேவையாற்றிவரும் தளம் அமைப்பினால் திருகோணமலை வாழ் இளையோருக்கான Graphic Designing சார் திறனை வளர்த்த்துக்கொள்ள உதவும் பொருட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இரண்டு மாத காலத்திற்கு நடைபெறவுள்ள இந்த வகுப்புகளில் Canva மற்றும் Adobe Photoshop ஆகிய செயலிகளை கற்றுக்கொடுக்கப்படவுள்ளதாகவும், இவ் வகுப்புகள் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளதாகவும் தளம் அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இவ் வகுப்புக்களில் பங்குகொள்ளும் இளையோருக்கு பயிற்றுவிக்க, குறித்த துறையில் அனுபவமிக்க திரு. கு. தனுஷன், திரு. ரோ. குகதாஸ் மற்றும் திரு. ர. ஜெசின் ஆகிய வளவாளர்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளனர்.