மின்சாரக் கட்டணக் குறைப்புக்குப் பிறகு அடுத்த இரண்டு வாரங்களில் சந்தையில் உள்ள பொருட்களின் விலைகள் குறையும் என்று அகில இலங்கை சிறுதொழில் வல்லுநர் சங்கம் அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்கும் தீர்மானத்தை பொதுப் பயன்பாட்டு ஆணையம் மேற்கொண்டதோடு, இது ஜனவரி 17 முதல் அமலுக்கு வந்துள்ளதாக சங்கத் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்தார்.
இது தொடங்கிய நாளிலிருந்தே உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான மின்சாரச் செலவுகள் கணிசமாக குறைந்துள்ளதாகவும், இதனால் பொருட்களின் விலை 5% முதல் 10% வரை குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, குறைந்த மின்சாரச் செலவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் சுமார் இரண்டு வாரங்களில் சந்தையில் கிடைக்கும், இதன்மூலம் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.
சிறுதொழில் வல்லுநர்கள், இந்த மாற்றம் நிலையானதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு, குறைவான உற்பத்தி செலவுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமாக அமையும் எனவும் தெரிவித்தனர்