ஹபரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீடொன்றில், 17ம் திகதி, 10 மாத ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
16ம் திகதி இரவு, தந்தை வீட்டை விட்டு வெளியே சென்றபோது, குழந்தையை வீட்டின் பின்புறத்தில் உள்ள நீர் குழியில் வீசிவிட்டு, பின்னர் வீட்டிற்கு கொண்டு வந்து படுக்கையில் வைத்ததாக தாய் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சம்பவம் கொலை என கண்டறியப்பட்டுள்ளது.
34 வயதுடைய உயிரிழந்த குழந்தையின் தாயே, குறித்த கொலைச் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஹபரணை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1