24.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இந்தியா

இந்திய தேர்தல் குறித்து மன்னிப்பு கோரிய மெட்டா நிறுவனம்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஜூக்கர்பெர்க், சமீபத்தில் ஜோ ரோகனின் போட்காஸ்டில் பேசியபோது, “2024 உலகளவில் மிகப்பெரிய தேர்தல் ஆண்டாக இருந்தது. பல நாடுகளில் ஆட்சியில் இருந்த கட்சிகள் தோல்வியடைந்தன” என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தில் இந்தியாவையும் சேர்த்து கூறியதற்கு, மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், “2024 தேர்தலில் இந்தியாவில் 64 கோடி மக்கள் வாக்களித்தனர். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீதான நம்பிக்கையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். கோவிட் காலத்தில் 80 கோடி பேருக்கு இலவச உணவு, 220 கோடி பேருக்கு இலவச தடுப்பூசி வழங்கியது இந்தியா. இந்த வெற்றி பிரதமர் மோடியின் சிறந்த நிர்வாகத்தை காட்டுகிறது” எனக்கருத்து தெரிவித்தார்.

மந்திரியின் இந்த கண்டனத்துக்குப் பிறகு, மெட்டா நிறுவனம் இந்தியாவிடம் மன்னிப்பு கோரியது. மெட்டாவின் இந்திய துணைத்தலைவர் ஷிவ்நாத் துக்ரால் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவிற்கு 2024 தேர்தல் தொடர்பான ஜூக்கர்பெர்கின் கருத்து பொருந்தாது. இது தவறான தகவலாகும். இந்தியா மெட்டா நிறுவனத்திற்கு முக்கிய நாடு, இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காது” என தெரிவித்துள்ளார்.

இந்த மன்னிப்பு உலகளாவிய தளத்தில் இந்தியாவின் நிலையை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்க்கு எதிராக காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

east tamil

குழந்தைக்குள்ளே குழந்தை

east tamil

மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி

east tamil

உணவு முடிந்ததால் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டார்: பொலிஸ் நிலையத்தில் நடந்த திருமணம்!

Pagetamil

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

Leave a Comment