மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தனது குழந்தையுடன் தாய் ஒருவர் குதித்துள்ளார்.
இன்று (16) மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
இதன் போது தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும், குழந்தையை தேடும் பணி தொடர்கின்றது.
அக்கரபத்தனை எல்பியன் தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இப்பெண் தலவாக்கலை தெவிசிரிபுற பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார். கணவனை விட்டு பிரிந்து இன்னொருவருடன் வாழ்ந்து வந்த இவர், இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் தனது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட தாய், லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1