மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்ற குழந்தை, வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தை வீட்டில் வந்து பருகக் கொடுத்த நிலையில் உடல் நீல நிறமாக மாறி உயிரிழந்தது.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை வெளியிட்ட காணொளி, சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அவர் கூறுகையில், வைத்தியரின் அசமந்தப் போக்கே என் குழந்தையின் மரணத்திற்கு காரணம், எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
சம்பவத்தால் கரடியனாறு வைத்தியசாலையில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
குழந்தையின் மரணத்திற்கான முழுமையான விசாரணை நடைபெற்று, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே மக்களின் வலியுறுத்தலாகும்.
சம்பவம் தொடர்பான உடற்கூறு பரிசோதனை மற்றும் மேலதிக விசாரணைகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. வைத்தியசாலைகளில் உறுதியான சிகிச்சை முறைகளின் அவசியம் மீண்டும் பேசப்பட வேண்டிய தருணமாக இது மாறியுள்ளது.
Click Here 👇