மட்டக்களப்பு, வாழைச்சேனையில் வீதியில் நடந்து சென்ற மாற்றுத்திறனாளி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
நேற்று புதன்கிழமை (15) இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் எல்லாளன் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்தது.
உயிரிழந்வர் மாற்றுத்திறனாளியான முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளியாவார்.
வாழைச்சேனை, கறுவாக்கேணி, கலைவாணி வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய விஜயநாதன் வினோஜித் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தையடுத்து மோட்டார் சைக்கிளை கைவிட்டு, அதை செலுத்தியவர் தப்பியோடி விட்டார். நடந்து சென்றவர் தலையில் காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1