கிண்ணியாவில் உள்ள சிறிபிட்டி குளத்திற்கு அருகில் உள்ள ஒரு மரத்தின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கிகளுக்கான முப்பது சுற்று தோட்டாக்கள் அடங்கிய ஒரு மகசீனை உப்புவெளி பொலிசார் நேற்று முன்தினம் (14) கண்டுபிடித்தனர்.
திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, கண்டுபிடிக்கப்பட்ட இந்த மகசீனில் உள்ள முப்பது தோட்டாக்கள் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருந்தன. சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1