Pagetamil
கிழக்கு

ஆசிரியர் ஆட்சேர்ப்பு செயன்முறையில் எவருக்கும் அநீதி வேண்டாம் – கிழக்கு மாகாண ஆளுநர்

கிழக்கு மாகாண ஆசிரியர் சேவைக்கான ஆட்சேர்ப்பு போட்டியின் நேர்முகத்தேர்வுகள் இம்மாதம் 16, 17மற்றும் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இதற்கான செயன்முறைப்பரீட்சை சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றைய தினம் (15) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்னசேகர மற்றும் ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் ஆளுநர் உரையாற்றியபோது, ஆட்சேர்ப்பு செயல்முறை எவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் எளிமையாகவும் நேர்மையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், நேர்முகத்தேர்வின் போது ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு, அவற்றை சரியான முறையில் கையாளவும் அழுத்தம் செலுத்தினார்.

இந்நிகழ்வில் ஆட்சேர்ப்பு செயல்முறையின் முக்கியத்துவம் மற்றும் விதிமுறைகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர் சேவை போட்டிக்கான இந்த நடவடிக்கைகள் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் எண்ணக்கருவுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போராட்டத்தின் மையத்தில் பட்டிப் பொங்கல்

east tamil

வீதியில் நடந்து சென்றவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு

Pagetamil

கிண்ணியாவில் தோட்டாக்கள் மீட்பு

Pagetamil

திருக்கோணமலையில் அடைமழை

east tamil

மீராவோடையில் சிறு பிள்ளையொன்று குளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு

east tamil

Leave a Comment