தேவையான பொருட்கள்
– மரவள்ளி கிழங்கு ½ kg
– பச்சை மிளகாய் 15
– கத்தரிக்காய் ½ kg
– மஞ்சள் பருப்பு 250g
– பீர்க்கங்காய் ½kg
– கீரை 1 கட்டு
– மஞ்சள் – தே. அ
– உப்பு – தே. அ
– தேங்காய் பால் – (பாதி தேங்காய்)
– பூண்டு 10
– சின்னவெங்காயம் 15
– கறிவேப்பிலை
செய்முறை
மரவள்ளி கிழங்கு, பச்சை மிளகாய், கத்தரிக்காய், மஞ்சள் பருப்பு, பீர்க்கங்காய், கீரை என்பவற்றை ஒரேடியாக இட்டு பாத்திரத்தில் வேகவைக்கவும்.
அதனுடன் மஞ்சள், உப்பு என்பவற்றை தேவையான அளவு சேர்த்து தண்ணீர் விட்டு மூடி வேகவைக்கவும்.
ஒரு கொதி வந்த பின்னர் மரக்கறிகளை கிளறி விடவும்.
நன்றாக வெந்த பின்னர் பூண்டு, சின்னவெங்காயம், கறிவேப்பிலை என்பவற்றை அதனுடன் இணைத்து கிளறி விடவும்.
காய்கறிகள் வேக வைத்த பாத்திரத்தில் தண்ணீர் வற்றிய பின்னர் நன்றாக அவிந்த மரவள்ளி கிழங்கை நன்றாக மசிக்கவும்.
எல்லா காய்கறிகளும் நன்றாக அவிந்த பின்னர் துருவிய ஒரு பாதி தேங்காயின் கெட்டியான முதல் பாலை இதில் சேர்த்து வேக வைக்கவும்.
மீண்டும் ஒரு முறை காய்கறிகளை நன்றாக மசித்த பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
சுவையான மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி தயார்