திருக்கோணமலையில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விடியல் 3.0 திட்டத்தின் கீழ், பகுதிநேர வருமான ஈட்டலுக்கான பயிற்சித் தொடர்களில் ஒன்றாக Trading தொடர்பான பயிற்சி பட்டறை இன்று (15.01.2025) காலை 9:30 மணிக்கு தளம் அலுவலகத்தில் ஒழுங்குசெய்யப்பட்டது.
இப்பயிற்சியில் வளவாளராக Mr. T. Thinesh Mudaly (MBA in HRM & Organizational Structure, BIT) அவர்கள் கலந்து கொண்டதோடு, அவரால் மாணவர்களுக்கு Trading துறையில் வினைத்திறன் மிக்க பயிற்சியும் வழங்கப்பட்டது.
பயிற்சியின் போது, Trading துறையின் அடிப்படை அறிமுகம், கிரிப்டோ கரன்சி தொடர்பான விளக்கங்கள், பாதுகாப்பு உத்திகள், மற்றும் வெற்றிகரமாக வர்த்தகம் மேற்கொள்ள தேவையான உக்திகள் ஆகியவற்றை மாணவர்களுக்கு தெளிவாக விளக்கியிருந்தார்.
இந்த பயிற்சியின் மூலம் Trading துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு தகுந்த அறிவும் ஆற்றலும் கிடைத்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் நேர்காணல் மற்றும் சந்தேகங்களுக்கும் தெளிவான பதில்களும் வழங்கப்பட்டன.
இன்றைய பயிற்சியை சிறப்பாக நடத்தி மாணவர்களுக்கு வழிகாட்டிய Mr. T. Thinesh Mudaly அவர்களுக்கு, விழாவின் ஏற்பாட்டாளர்களும், மாணவர்களும் மனமார்ந்த நன்றியை தெரிவித்திருந்தனர்.