யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று (15.01.2025) அதிகாலை 3மணி அளவில் மர்ம படகு ஒன்று கரையொதுங்கி உள்ளது.
அண்மைக்காலமாக கடல் நிலையின் மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல், நிலநடுக்கம் போன்ற அனர்த்தங்கள் பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது
அதன் போது மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து குறித்த படகு வந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.
குறித்த படகில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருவதோடு, இதனை பார்வையிடுவதற்கு பல மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1