வரும் ஜனவரி 24ம் திகதி அக்கரைப்பற்று நகரில் 2025ம் ஆண்டுக்கான புகைப்படக்கலை விழா இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் புகைப்படத்துறையில் ஆர்வமுள்ள பலரும் கலந்துகொள்ள முடியும் என குறித்த நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, கலைஞர்கள் தங்கள் தனித்துவமான பார்வைகளின் மூலம் புகைப்படக் கலையின் பல்வேறு கோணங்களை வெளிப்படுத்தி, அழகிய சிந்தனைகள், கலைரீதியான பார்வைகள் மற்றும் ஆழ்ந்த கதைகளை பகிர உள்ளனர் எனவும் இந்நிகழ்வு, கலைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு முக்கிய தொடர்பு தளமாக அமையும் எனவும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1