அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா ஆறு உடைபெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சுதுவெல்லா கிராமத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் அவசரமாக இடம்பெயர்த்துள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை காரணமாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும், கல்லோயா ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில், அடுத்தடுத்த அபாயங்களை தவிர்க்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து, விபத்துநிவாரண பிரிவுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் தகவல்களுக்காக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1