முல்லைத்தீவில் கடந்த சனிக்கிழமை (11.01. 2025) இரவு ஒரு அதிர்ச்சியூட்டும் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச் செயல் வினோதமானது மட்டுமல்ல மிகவும் மோசமான செயலும் கூட என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால், திருடனால் திருட்டினை எளிதில் மேற்கொள்ளக்கூடியதாக இருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற அந்த சிறிய வீட்டில் மாவீரர் கதிரொளியின் தாயார் வசித்து வந்துள்ளார்.
மேற்படி வயதான தாயார் , இரவில் சில நேரங்களில் பேரப்பிள்ளையின் வீட்டுக்கு சென்று இரவு தங்குவதுண்டு. அப்படியாக நேற்று முன்தினம் (11.01.2025) இரவு வீட்டில் இல்லாத நேரத்தில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த வினோத திருடன் புளி மற்றும் தேங்காயை மட்டும் திருடி விட்டு, அந்த தாயார் பெறுமதியான உடைகள் என்று நினைத்து வைத்திருந்த அனைத்து உடைகளையும் நடுவீட்டுக்குள் போட்டு எரித்து விட்டு சென்றுள்ளதாக கருத்துக்கள் வெளிவந்துள்ளன.