நேற்றைய தினம் (12.01.2025) தம்பலகாமம், ஆதி கோணநாயகர் தேவஸ்தானம், தொழும்பாளர்களுக்கும் நம்பிக்கை பொறுப்பாளர் சபைக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு காலை 9.00 மணிக்கு ஆலயத்தின் அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் ஆலயத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள், தொழும்பாளர்களின் நலன்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், விவாதங்களின் முடிவாக பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இச்சந்திப்பு ஆலய அபிவிருத்திக்கான புதிய திட்டங்களை வடிவமைப்பதற்கும் தொழும்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுத்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1