27.4 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

நடுவீதியில் வைத்து மாணவியை கடத்திச் சென்ற மச்சான்!

கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று (11) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வாகனமொன்றில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சி.சி.ரி.வி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிறிய கருப்பு வாகனத்தில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அச்சமடைந்த மற்றொரு மாணவி அங்கிருந்து ஓடியதுடன், கடத்தப்பட்ட மாணவியை காப்பாற்றுவதற்கு நபரொருவர் முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.

கடத்தலுடன் தொடர்புடைய வாகனம் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த வாகனம் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மாணவியின் மச்சானே கடத்தலில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் சென்ற இடம் பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் தவுலகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடத்திச்சென்றவர்களை கைது செய்வதற்குரிய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மது போதையில் வந்த பொலிஸாசாரால் விபத்து

east tamil

மஹிந்தவுக்கும் வீட்டுத்திட்டத்தில் வீடு வழங்கப்படலாம்!

Pagetamil

யோஷித ராஜபக்ஷ இன்று மீண்டும் நீதிமன்றத்தில்

Pagetamil

கட்டைக்காடு குப்பை மேடாக மாறியதால் மக்கள் அவதி

east tamil

யாழ் பல்கலைக்குள் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்… இரவில் தொங்கும் பெண்களின் உள்ளாடைகள்- கலைப்பீடாதிபதி பதவிவிலகலுக்கு இதுதான் காரணமா?

Pagetamil

Leave a Comment