25.5 C
Jaffna
January 23, 2025
Pagetamil
மலையகம்

கண்டி வத்தேகம படுகொலை: ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

கண்டி, வத்தேகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது

வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டலஹகொட பகுதியில் நேற்று முன்தினம் (04) நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (05) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வத்தேகம பொதுச் சந்தையில் மீன் வியாபாரியான இவர், கடந்த 3ம் திகதி இரவு தனது வீட்டுக்கு முன்னால் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மற்றும் கைது செய்யபட்டவர் இருவரும் மீன் வியாபாரிகள் ஆவர்,

கூரிய ஆயுதங்களால் தாக்கபட்டு ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று (05) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (05) வைத்தியசாலையில் இருந்து அவரது சடலம் வத்தேகம பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, ​​குற்றவாளிகளை கைது செய்யுமாறு கோரி பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக வத்தேகம நகரில் பதற்ற சூழல் ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மஸ்கெலியாவில் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு

east tamil

கண்டி-மஹியங்கனை வீதி: போக்குவரத்து தடை

east tamil

நானுஓயாவில் குடும்ப தகராறு – ஒருவர் பலி

east tamil

மகிழுந்து-பேருந்து விபத்து

east tamil

மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து

Pagetamil

Leave a Comment