இன்று (06.01.2025) காலை 09.40 மணியளவில் கொட்டகலை பிரதேசத்தில் குடுஓயா கிராமசேவகர் பிரிவில் 475 ஏ, கொட்டகலை கொமர்சியல் பகுதியில் மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 24 வயதான ஸ்டோன்கிளிப் தோட்டம், கொட்டகலை பகுதியைச் சேர்ந்த மலித் குமார் என்பவரே, படுகாயம் அடைந்துள்ளார்.
காயமடைந்தவரை உடனடியாக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பந்தமாக திம்புலபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1