2025ம் ஆண்டு முதல் தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம் திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளர் தலைமையில் நேற்றைய தினம் (03.01.2025) இடம்பெற்றது.
இச் செயற்றிட்டம் நகராட்சி மன்ற செயலாளர் தே.ஜெயவிஷ்ட்ணு அவர்களின் தலைமையில், 2025ம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி தொடக்கம் நகராட்சி மன்றம் தனது சேவையை விஸ்த்தரிக்கும் முகமாக விஷேட பணிக்குழு ஊடாக குறித்த செயற்றிட்டங்களை மேற்கொள்ளப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதன் ஒரு கட்டமாகவே நேற்று (03.01.2025) திருகோணமலை நகராட்சி மன்ற ஊழியர்கள் பேரூந்து தரிப்பு நிலையங்களை சுத்திகரித்து இருக்கைகள் மற்றும் கைப்பிடி கம்பங்களை வர்ணம் பூசி புதுப்பொலிவுபடுத்தியுள்ளனர்.
நகராட்சி மன்ற ஊழியர்கள் இரவு பகல் பாராமல் இவ் வேலையில் ஈடுபட்டதுடன், கட்டாக்காலி மாடுகளை பிடிக்கின்ற வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.