24.8 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

சிற்றி வன்பொருள் வர்த்தக நிறுவனம் மீது அவகீர்த்தி சுமத்தியதற்காக எம்.பி. மீது குற்றச்சாட்டு

சிற்றி வன்பொருள் வர்த்தக நிறுவன உரிமையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தனது நிறுவனத்துக்கும் வியாபாரத்துக்கும் அவகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று (04.01.2025) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரிமையாளர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

65 வருடங்களாக கட்டிடப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் தனது நிறுவனம், மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் கனியவளத் திணைக்களத்தின் அனுமதியுடன், சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலைக்கு சுண்ணக் கற்களை எடுத்துச் சென்ற தனது நிறுவன வாகனம், சாவகச்சேரியில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தனது வாகனத்தை நிறுத்தி தடுப்புச் செய்ததாகவும், வாகனத்தை திறந்து உள்ளே பார்ப்பதற்கான முயற்சியில் சட்டத்தை மீறியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

வவுனியா மற்றும் கெப்பத்திக்கொல்லாவ நீதிமன்றங்கள், இவ்வியாபாரம் சட்டத்துக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படுவதாகத் தீர்ப்பு வழங்கியதை அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் 100 தொழிலாளர்கள் நேரடியாகவும், 300 கல் உடைக்கும் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் இந்த வியாபாரத்தின் மீது நம்பி வாழ்ந்துவருவதாக உரிமையாளர் தெரிவித்தார். இளங்குமரன் எம்.பியின் நடவடிக்கைகள் இவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலானது என்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், இளங்குமரன் எம்.பி அளித்த ஊடக அறிக்கைகள் தொடர்பில் கணனி குற்றப்பிரிவில் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நடப்புத் திட்டங்கள் மற்றும் அனுமதிகளுக்குள் செயல்படுவதை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழிலாளர் மனஉளைச்சலுக்கு காரணமாக இல்லாமல் செயல்படவேண்டும் என்றும் உரிமையாளர் வலியுறுத்தினார்.

கடற்தொழில் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், இப்பிரச்சினை குறித்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கைதிகளை விடுவிக்கக் கோரி கையெழுத்து போராட்டம்

Pagetamil

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் கருத்தறியும் கூட்டம்

Pagetamil

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைது

east tamil

UPDATE – காட்டிற்குள் உல்லாசமாக சென்ற எட்டு பேர் கைது

east tamil

உலகில் விசா பெற எளிதான நாடுகளின் தரவரிசையில் இலங்கை 33வது இடத்தில்

east tamil

Leave a Comment