உலகிலேயே மிக வயதானவராகக் கருதப்படும் தோமிக்கொ இத்தூகா காலமானார்.
ஜப்பானைச் சேர்ந்த அவருக்கு வயது 116.
ஜப்பானின் ஹியொகொ மாநிலத்தில் அமைந்துள்ள அஷியா பராமரிப்பு இல்லத்தில் டிசம்பர் 29ஆம் திகதி அவர் காலமானார்.
கடந்த ஆண்டு 117 வயது மரியா பிரன்யாஸ் காலமானதை அடுத்து இத்தூகா உலகின் மிக வயதான பெண் என்ற பெயரைப் பெற்றார்.
அப்போது, இந்த தகவலை இத்தூகாவிடம் சொன்னபோது அவர் கூறியது “நன்றி” மட்டுமே..
ஒசாக்காவில் பிறந்த அவருக்கு 2 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர்.
தற்போது பிரேசிலைச் சேர்ந்த 116 வயது இனா கானாபரோ லுகஸ் உலகின் மிக வயதானவராகக் கருதப்படுகிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1