நேற்றைய தினம் (ஜனவரி 01) குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்கள் இல்லாத தனியாருக்கு சொந்தமான காணிகளையும், பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பகுதி மக்கள் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த காணிகளை கையகப்படுத்தும் முகமாக அப்பகுதிகளில் பெயர்ப்பலகையை காட்சிப்படுத்தியுள்ளதாகவும் இந்த காணிகளில் தொல்லியல் சின்னங்கள் எவையும் இல்லாத நிலையில் தொல்லியல் திணைக்களம் இந்த காணிகளை கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1