நேற்றைய தினம் (29.12.2024), சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையம், புகைப்படக் கலைஞராக திகழும் திரு. ஜனகன் சிறிதரனுக்கு “இளம் கலைஞர்” பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.
கலைஞர்களின் திறமைகளை மதிப்பளிக்கும் நோக்கில், சேனையூர் அனாமிகா பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அனாமிகா நினைவுப் பேருரை மற்றும் இலக்கிய கூடல் நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது.
அகில இலங்கை மட்டத்திலும் பல சர்வதேச போட்டிகளிலும் பங்கு பற்றி பரிசில்களை பெற்றுள்ள இவர், தொழிலை மட்டும் முக்கியப்படுத்தாமல் புகைப்படம் எடுப்பது ஒரு கலை என்பதை நிரூபித்துள்ளார் என பாராட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், கட்டைப்பரிச்சானின் கலை குடும்ப வாரிசான அவர், அனாமிகா 2024 நிகழ்வில் இளம் கலைஞர் விருது பெற்றதன் மூலம் மேலும் பெருமை சேர்த்துள்ளார்
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
1
+1
+1
+1