நேற்றைய தினம் (28) திருகோணமலை, தம்பலகாமம், குளக்கோட்டன் மகா வித்தியாலயத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) தொடர்பான ஒரு சிறப்பு பயிற்சி செயலமர்வு நடைபெற்றது.
கல்வியே எமது எதிர்காலம் – செயல் 18 என்ற திட்டத்தின் கீழ், க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி நிலை மற்றும் பாட அடைவு மட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், தம்பலகாமம் ஆதிகோணநாயகர் தேவஸ்தானத்தின் அனுசரணையுடன் இந்த பயிற்சி அமர்வு இடம்பெற்றது.
இப் பயிற்சி செயலமர்வின் போது, மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படைகள், அதற்கான பிரயோகங்கள் மற்றும் எதிர்காலத்தில் கல்வி மற்றும் தொழிலில் இது ஏற்படுத்தும் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டன. மேலும், மாணவர்களின் சுயநம்பிக்கையையும் திறமைகளையும் வளர்க்கும் வகையில் பல்வேறு செய்முறைகள் கற்றுத்தரப்பட்டது.
இந்த பயிற்சி செயலமர்வு, மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதுடன் அவர்களது கல்வி பயணத்தை எளிதாக்கும் ஒரு முக்கியமான முயற்சியாகவும், திருகோணமலை மாவட்டத்தில் கல்வி தரத்தை உயர்த்தும் முயற்சியாகவும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.