26 C
Jaffna
December 30, 2024
Pagetamil
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தல்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் 82(A) பிரிவின்படி, அனைத்து எம்.பி.க்களும் பதவிக்கு நியமிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வருடமும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் சொத்துப் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால், ஜூன் மாதம் மீண்டும் அந்த அறிக்கைகளை பெற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் வீதியில் சாகசம் காட்டிய தனியார் சிற்றூர்தியின் வழித்தட அனுமதி இரத்து!

Pagetamil

பல்கலைக்கழக வளாகங்களாக மாறும் தேசிய கல்வியியல் கல்லூரிகள்

east tamil

சிகிரியாவுக்காக நிதி உதவியை முன்மொழிந்த கொரிய நிறுவனம்

east tamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

பெரஹரா யானை தாக்கியதில் ஒருவர் காயம்

east tamil

Leave a Comment