27.1 C
Jaffna
December 29, 2024
Pagetamil
இலங்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு அரசினால் நிவாரண தொகை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 6,000 ரூபா கொடுப்பனவை இவ்வருட இறுதிக்குள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, கல்வியமைச்சினால் அனுகூலங்களைப் பெறுவதற்குத் தகுதியான பிள்ளைகளைத் தெரிவு செய்து அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கல்வி அமைச்சு முன்னின்று செயற்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் கடந்த வியாழக்கிழமை (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “நமது நாட்டின் எதிர்காலத்தை பிரகாசிக்கும் முக்கிய குழுவாக தற்போதைய தலைமுறையினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகளின் எதிர்கால நல்ல கனவுகள் மலர ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுத்து கல்வி வசதிகளை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம் எனவும், எதிர்வரும் சில நாட்களில் இந்த நன்மையைப் பெற வேண்டிய சகல பிள்ளைகளுக்கும் முறையான வேலைத்திட்டத்தின் ஊடாக 6000 ரூபா உதவித்தொகை வழங்க உள்ளோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிகிரியாவுக்காக நிதி உதவியை முன்மொழிந்த கொரிய நிறுவனம்

east tamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

பெரஹரா யானை தாக்கியதில் ஒருவர் காயம்

east tamil

பூநகரி பிரதேசசபைக்கு விருது!

Pagetamil

கிளிநொச்சி மண்ணின் அடையாளம் நா.யோகேந்திரநாதன் காலமானார்

east tamil

Leave a Comment