26 C
Jaffna
December 31, 2024
Pagetamil
இலங்கை

இலஞ்சம் வாங்கியபோது மாட்டிய முன்னாள் மாகாணசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே மற்றும் வர்த்தகர் ஆகியோர் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

09 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சலோச்சன கமகே மற்றும் அதற்கு ஆதரவாக செயற்பட்ட வர்த்தகர் ஒருவரையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (27) கைது செய்தனர்.

கோட்டை, மாதிவெல பிரதேசத்தில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, புறக்கோட்டை பகுதியிலுள்ள கடையொன்றின் முன்பாக வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டோரிங்டன் அவென்யூ பகுதியில் முறைப்பாட்டாளரின் உறவினர் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றை நகர அபிவிருத்தி அதிகார சபை கையகப்படுத்தியதன் பின்னர், அதற்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுக் கொள்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகக் கூறி சந்தேகநபர்கள் இலஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிய இராணுவத்தளபதி நியமனம்!

Pagetamil

புதிய கடற்படை தளபதி நியமனம்

Pagetamil

யாழில் போராட்டம்

Pagetamil

இணைய மிரட்டல் சம்பவம் இரு மாணவர்கள் கைது

east tamil

“தனியார் வகுப்புகள் இல்லாமல் சிறந்த கல்வி பெற இயலும்” – ஜோசப் ஸ்டாலின் கருத்து

east tamil

Leave a Comment