முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி தொடர்பான முறைப்பாடு தொடர்பில் திசர நாணயக்கார பிபில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்லாந்து நாட்டில் தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக வாக்குறுதியளித்து, 40 இலட்சம் ரூபா பணம் கேட்டு அதில் 30 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 2018 டிசம்பர் 10 ஆம் திகதியும் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1