பசுமையான திருகோணமலை திட்டத்தை முன்னெடுத்து நீச்சல் சாதனையாளன் ஹரிதரன் தன்வந்த், 100 மரக்கன்றுகளை நட்டு பேணும் செயல்பாட்டை ஆரம்பித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (28.12.2024) காலை 8.30 மணிக்கு திருகோணமலை புகையிரத நிலைய வளாகத்தில் இவரது மர நடுகை திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இவருடன் இணைந்து, திருகோணமலை மாவட்ட சாரணர்களும் மர நடுகையில் கலந்து செயல்பட்டனர். திட்டத்தின் நோக்கம் பற்றி முதலில் இவர்களுடன் கலந்துரையாடப்பட்ட பின்னர், அனைவரும் இணைந்து மரக்கன்றுகளை நாட்டினர்.
இவ்வாறு, 100 தென்னங்கன்றுகளை புகையிரத நிலைய சூழலில் நட்டுள்ள ஹரிதரன் தன்வந்த், பசுமையான திருகோணமலை நோக்கில் முன்னேற்றம் காண ஆர்வம் செலுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1