நேற்றைய தினம் (27) கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களை திருகோணமலை வேலையில்லா இல்லா பட்டதாரிகள் ஒன்றியத்தின் சார்பில் நிர்வாக மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர் சந்தித்திருந்தனர்.
இதன்போது, திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளின் விபரங்கள் அடங்கிய தொகுப்பு அவரிடம் கையளிக்கப்பட்டது.
எல்லோராலும் இலகுவாக விளங்கிக் கொள்ள கூடிய வகையில் பட்டதாரிகளின் முழு விபரமும் (பெயர், வயது, பெற்ற பட்டம், பட்டம் பெற்ற பல்கலைக்கழக விபரம் மற்றும் பட்டம் வலுப்பெறும் திகதி எனும் தகவல்களை உள்ளடக்கிய), வேலையில்லா பட்டதாரிகளின் கோரிக்கை மனு, விஷேட தேவையுடைய பட்டதாரிகளின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் என பல்வேறுபட்ட ஆவணங்களும் ஆளுநர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அவை தொடர்பில் எமது கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் மிகுந்த கரிசனையோடு கவனித்திருந்தார்.
மேலும் இச் சந்திப்பின் போது, நடைபெற்ற ஆசிரிய நியமங்கள் தொடர்பான விளக்கம், ஏற்கனவே விளம்பரப்படுத்திய சிறுவர் நன்னடத்தை பரீட்சையினை நடத்துதல், கணக்காய்வு பரிட்சையினை விளம்பரப்படுத்துதல், ஆசிரியப்போட்டி பரீட்சையில் வயதெல்லையை 35 – 40 வரையில் அதிகரித்தல், ஆசிரியர் திறந்த போட்டி பரீட்சையில் நேர்முகப் பரீட்சையின் போது வேலையில்லாத பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளித்தல், பட்டதாரிகளுக்கு பொதுவான நியமனம் ஊடாக வழங்குதல், அரச பாதிட்டுக்கு முன்பாக அனைத்து வேலையில்லா பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பை பெற்றுத் தருதல், ஆசிரியர் தேர்வில் உள்ள குளறுபடிகள் நிவர்த்திக்வும், பரீட்சைகளின் வினாத்தாள்கள் ரகசியம் பேணப்படுதல், இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும், கிழக்கு மாகாணத்தில் மூவாயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், HNDIT, BSC, விசிட தேவை உடைய பட்டதாரிகள் கவனA த்தில் கொள்ளப்படுதல் என பல்வேறு தொழில் ரீதியான கருத்துக்கள் பற்றி பேசப்பட்டிருந்தன.
நேற்றைய நிகழ்வில், V. விஜயபிரதீபன், A.L. சியாத், A. நஸீர், J.A ஹஸ்ஸான், A.R.M பூசூலி, N. சுசானா, M. டிஷாந்த் ஆகியோர் திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சார்பில் கலந்து கொண்டு இது தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்ட்து