மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்ப பெண் ஒருவரின் Bridge Market தீயூட்டபட்டுள்ளது.
குறித்த பெண்ணால் முன்னெடுக்கப்பட்டு வந்த வர்த்தக மையமான Bridge Market நேற்றைய தினம் (27) இரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் வர்த்தகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலைக்குரிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
தீப்பரவல் காரணமாக குறித்த மார்க்கெட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த ஒருவரும் கைது செய்யப்படவில்லை.
பொலிஸாரின் விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்ற இந்நிலைமையில், பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் வர்த்தகர்களின் நலன் குறித்து முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உள்ளூரார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1