27 C
Jaffna
December 29, 2024
Pagetamil
இலங்கை

ஊடகவியாளர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலுக்கு சமத்துவக் கட்சி கண்டனம்

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனைக் கடத்த முற்பட்டதையும் அவர் மீதான
தாக்குதலையும் சமத்துவக்கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பாதிக்கப்பட்ட,
ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாகவே எப்போதும் தமிழ்ச்செல்வனுடைய ஊடகப்
பங்களிப்புகள் இருந்தன. ஆகவே அவை ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட மக்களுடைய மேம்பாட்டுக்கும் அவர்களுடைய விடுதலைக்கும்
உயிர்க்குரலாக அமைந்தவை.

அத்துடன் தமிழ்ச்செல்வன் சுற்றுச்சூழலிலும் தீவிரப் பற்றோடு இயங்கியவர்.
சூழற்கேடுகளை வலுவான முறையில் எதிர்த்து ஊடகத்தின் வழியாகவே போராடியவர்.
அத்தோடு ஊழலையும் அதிகார துஸ்பிரயோகங்களுக்கும் எதிராக களமாடியவர்.
அவருடைய ஊடகத்துறைப் பங்களிப்புகள் மக்களின் பாராட்டைப்பெற்றவை. இவ்வாறு
பன்முக நிலையில் ஊடகப் பணியாற்றிய தமிழ்ச்செல்வனைக் கடத்த முற்பட்டது
தவறு. அந்தக் கடத்தல் சாத்தியமாகாதபோது அவரைச் சந்தேக நபர்கள்
தாக்கியுள்ளனர்.

ஊடகவியாளரை தாக்கி கடத்த முற்பட்டவர்களின் முயற்சி
வெற்றிப்பெற்றிருப்பின் அவர்கள் தமிழ்ச்செல்வனை கொலை செய்து எங்கோ ஒர்
இடத்தில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றிருப்பார்கள். அதிஸ்டவசமாக அவர்
போராடி தப்பித்துள்ளார்.

இச் செயற்பாட்டுக்கு சமத்துவக் கட்சி தனது வலிமையான கண்டனத்தைத்
தெரிவித்துக் கொள்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகளை
மேற்கொண்டு குற்றவாளிகளின் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட
வேண்டும். அதற்கான பொறுப்பு புதிய அரசாங்கத்துக்குண்டு. அதை அரசாங்கம்
மேற்கொள்ள வேண்டும். எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வனை தாக்கி கடத்துவதற்கு முற்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி பொலீஸரால் கைது செய்யப்பட்டு இன்று (28)
நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவர்களை 30 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறும் குறித்த தினத்தில் அடையாள
அணிவகுப்புக்குட்படுத்துமாறும் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் ஏற்கனவே போதைபொருள் உட்பட பல்வேறு குற்றச்
செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் அது அவர்களுக்கு வழக்குகள்
காணப்படுவதாகவும், பொலீஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போக்குவரத்து விதிமீறல்: 383 சாரதிகள் மீது வழக்கு பதிவு

east tamil

‘மக்களுக்கு எதிராக செயற்பட்ட அரச அதிகாரிகளுடன் போராடிக்கொண்டிருக்கிறோம்’: அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

Pagetamil

மஹிந்தவின் வலது கையிடம் நேற்று: மகனிடம் 3ஆம் திகதி விசரணை!

Pagetamil

இலஞ்சம் வாங்கியபோது மாட்டிய முன்னாள் மாகாணசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

Pagetamil

மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

Pagetamil

Leave a Comment