முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இல்லை என அரசாங்க உளவுத்துறை தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆளணி ஒதுக்கீட்டில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதால் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அரசாங்க புலனாய்வுப் பிரிவின்படி அவ்வாறான அபாயம் ஏதும் இல்லை என அறிக்கையளித்துள்ளதக வத்தகல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சர்ச்சைக்குரிய பேட்டியளித்த சட்டத்தரணி மனோஜ் கமகேவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
“கமகே ஊடகங்களுக்கு தனது பேச்சுக்களில் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும். இந்த வகையான அறிக்கை பொதுமக்களை தவறாக வழிநடத்த உதவுகிறது,” என்று அவர் கூறினார்.