அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் முதல்கட்டத்தில் தகுதிப் பெற்ற பயனாளர்களுக்கான நிலுவைத் தொகை இன்று (27ம் தேதி) முதல் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், இதுவரை செலுத்தப்படாத 13 கோடியே 14 லட்சத்து 77,750 ரூபாய் தொகை, தகுதிப் பெற்ற 2,12,423 குடும்பங்களின் வங்கிக் கணக்கில் இன்று நேரடியாக வைப்பிலிடப்படும் எனவும் இதனால், அஸ்வெசும பயனாளிகள் இன்று முதல் தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் நலன்புரி தொகையை எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் இந்த திட்டம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1