யாழில் தொடர்ந்து நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் நேற்றைய தினம் (26) யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கைதடி மேற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம் தனுசன் என்ற 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் கடந்த 23ம் திகதி காய்ச்சல் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக 24ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், குறித்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1