24.9 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஐவருக்கு விசாரணை

பாரிய நிதி மோசடி மற்றும் கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஐந்து முன்னாள் அமைச்சர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஐந்து பேர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அத்தோடு, முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மீளப்பெறப்பட்டு நீதிமன்றில் நிராகரிக்கப்பட்ட பல வழக்குகளை மீள் விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை உரிய சட்ட பிரிவு மேற்கொண்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

முன்னாள் அமைச்சர்கள் அந்த வழக்குகள் நிராகரிக்கப்படக் காரணம் தொடர்பான காரணிகள் குறித்தும் இந்த நாட்களில் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

இதேவேளை, நிதிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் குழு தொடர்பான தகவல்களை பல்வேறு குழுக்களின் ஊடாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியின் பொங்கல் நிகழ்வு

east tamil

இரத்தினக் கற்களை கடத்த முயன்ற சீன தந்தை, மகன் கைது

east tamil

சீன ஜனாதிபதியை சந்திக்கும் அனுர

east tamil

பயிர் சேதத்திற்கு மாத இறுதியில் இழப்பீடு

east tamil

போயா தினத்தில் மதுபான விற்பனை – ஒருவர் கைது

east tamil

Leave a Comment