27.8 C
Jaffna
December 28, 2024
Pagetamil
கிழக்கு

பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்றம்

இன்றைய தினம் (27.12.2024) பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்றமானது நடைபெற்றது.

இந் நிகழ்வில் மாணவர்களது தனித் திறன்கள் வில்லுப்பாட்டு, கதை, கவிதை, பாட்டு நாடகம் என இயல் இசை நாடகம் ஆகிய செயற்பாடுகள் மூலம் சிறப்பாக வெளிப் படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக Social Development Foundation நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. குணபாலன் நிரோஷன், திருகோணமலை சமூக செயற்பாட்டாளர் இணையத்தின் செயலாளர் திரு.கஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

அறிவு ஒளி மையத்தின் நிறுவனர் உதயகுமார் அஜித் குமார், விவேகானந்தா மீனவர் சங்கத் தலைவர் கீராலன், மகளிர் சங்கத் தலைவி கலாரூபன் தர்சினி, அறநெறிப் பாடசாலை ஆசிரியர் இளங்கோவன் ஜெயவதணி, அறிவு ஒளி மையத்தின் நிர்வாகச் செயலாளர் புகழ் வேந்தன் டிலக்ஷிகா ஆகியோர் பங்கு பெற்றனர்.

மேலும் இந்த நிகழ்வை முத்தமிழ் மாணவர் மன்றத்தின் தலைவர் செந்தூரன் வர்ஷனன் துணைத் தலைவர் பு. ஜனுர்ஷிகா, பொதுச் செயலாளர் இளங்கோவன் ரிஷிகவி, பொருளாளர் தினேஷ் குமார் சாத்விகா உட்பட்ட அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் சிறப்பான முறையில் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிழக்கு மாகாண ஆளுநருடன் திருகோணமலை வேலையில்லா பட்டதாரி நிர்வாக, ஏற்பாட்டுக் குழுவினர் சந்திப்பு

east tamil

பொலிஸ் அதிகாரியை தாக்கிய சந்தேக நபர்கள் கைது

east tamil

கல்லடி Bridge Market தீக்கிரை

east tamil

பசுமையான திருகோணமலை திட்டத்தின் கீழ் மர நடுகை – ஹரிதரன் தன்வந்த்

east tamil

அனல் மின் நிலையம் அமைக்க பெறப்பட்ட காணிகளை வழங்குங்கள் – சம்பூர் மக்கள் கோரிக்கை

east tamil

Leave a Comment