26.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
கிழக்கு

திருகோணமலை கடற்பரப்பில் ஆளில்லா விமானம்

திருகோணமலை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) அதிகாலை 4.00மணியளவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களினால் திருகோணமலை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான நிலையில் ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கண்டுபிடிக்கப்பட்ட குறித்த ஆளில்லா விமானம் படகில் கட்டப்பட்டு கரைக்கு இழுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மீன் பிடிக்க சென்ற மீனவர், கடலில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் குறித்த விமானத்தினை தாம் அவதானித்ததாகவும் அதனைத்தொடர்ந்து அதனை தனது படகில் கட்டி கரைக்கு இழுத்து வந்ததாகவும் தெரிவித்தார்.

சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான குறித்த ஆளில்லா விமானம் மோட்டாரின் மூலம் இயக்கப்படும் ஒன்றாக காணப்படுவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தருமை ஆதீனம் திருக்கோணேஸ்வரத்திற்கு வருகை

east tamil

கிழக்கு மாகாண சபையின் புதிய நியமனங்கள்

east tamil

டிப்பர் வாகனம் மோதியதில் பொலிஸார் உயிரிழப்பு

east tamil

Update – 3 – கடலில் நீராட சென்ற 3 பேர் – மூவரின் சடலமும் மீட்பு

east tamil

Update 2 – கடலில் நீராட சென்ற 3 பேர்! – சிறுவனின் சடலம் மீட்பு

east tamil

Leave a Comment