திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் திருமுறைச் செப்பேடு கண்டருளிய 27வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் இன்றைய தினம் (27.12.2024) திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு மதியம் 3:30 மணியளவில் வருகை தந்தார்.
விசேட கௌரவிப்புகளுடன் சுவாமிகள் அழைத்துச் செல்லப்பட்டு ஆலய வழிபாட்டுகளில் ஈடுபட்டதுடன், அதனைத் தொடர்ந்து, பொன்னாடை போர்த்தி சுவாமிகள் ஆலய நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.
இதன் போது, வேலன் சுவாமிகள், ஆலயத்தின் செயலாளர் அருண் மற்றும் ஆலய பரிபால சபையினர் கலந்துகொண்டிருந்தனர்.
சைவ சமயத்தின் தலைசிறந்த ஆன்மிக குருவாகவும், தெய்வீக ஆளுமையைக் கொண்ட ஒரு பெரிய சைவ திருமுறைத்திருநீறுப் போதகராகவும் விளங்கும் சுவாமி அவர்களது பயணங்கள் மற்றும் செயல்பாடுகள் ஆன்மீக உலகில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்துவனவாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.