தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (26) களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
குறித்த விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையின் பல்வேறு தேவைகள் குறைபாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டார். அத்துடன் சில பிரிவிற்கான இயந்திரங்கள் பழுதடைந்தமை தொடர்பில் எழுந்த விமர்சனங்களுக்கு துரித கதியில் அவற்றை திருத்தியமைக்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், வைத்தியசாலையின் சுற்றுச்சூழலையும் அதிகாரிகளுடன் சென்று நிலைமைகளை குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம். ரகுமானுடன் சென்று பார்வையிட்டார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினருக்கு வைத்திய அத்தியட்சகர் வைத்தியசாலையில் செயற்படுத்தப்பட வேண்டிய அபிவிருத்தி திட்ட வரைபுகளுடனான முன்மொழிவை பாராளுமன்ற உறுப்பினருக்கு தெளிவுபடுத்தினார்
மேலும், இதன் போது குறித்த வைத்தியசாலையின் புதிய கட்டட நிர்மாணங்களை பார்வையிட்ட அவர் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு பல மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவ்விடத்தில் உறுதியளித்தார். இதே வேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாமையும் பார்வையிட்டார்.
பின்னர் அங்கு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுகமக்களிடம் சிநேகபூர்வமாக உரையாடி குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார். இக்கள விஜயத்தின் அடுத்து வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் குறைநிறைகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.